நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 171 இடங்கள்

7 hours ago 3

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 171 ஜூனியர் ஓவர்மேன்/ மைனிங் சிர்தார் பணிகளுக்கு டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. ஜூனியர் ஓவர்மேன் (டிரெய்னீ): 69 இடங்கள் (பொது-31, பொருளாதார பிற்பட்டோர்-6, ஓபிசி- 18, எஸ்சி-13, எஸ்டி-1). சம்பளம்: ரூ.31,000- ரூ.1,00,000. தகுதி: மைனிங்/ மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழ், டிஜிஎம்எஸ்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஓவர்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். படிப்பானது ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி மையத்தில் பெற்றதாக இருக்க வேண்டும்.

2. மைனிங் சிர்தார்: 102 இடங்கள் (பொது-59, பொருளாதார பிற்பட்டோர்-10, ஓபிசி-8, எஸ்சி-24, எஸ்டி-1). சம்பளம்: ரூ.26,000- ரூ.1,10,000. தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ அல்லது பி.இ., முடித்திருப்பதோடு மைனிங் சிர்தார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு பொது பிரிவினர்கள் 30 வயதிற்குள்ளும், எஸ்சி/எஸ்டியினர் 35 வயதிற்குள்ளும், ஓபிசியினர் 33 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் குவாண்டிவ் அப்டிடியூட், ரீசனிங் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

கட்டணம்: ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.550/-. மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.450/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் புராசசிங் கட்டணமாக ஜூனியர் ஓவர்மேன் பணிக்கு ரூ.250/-, மைனிங் சிர்தார் பணிக்கு ரூ.200/- செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.nlcindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.05.2025

The post நெய்வேலி நிலக்கரி கழகத்தில் 171 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article