தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட்

3 months ago 14

பணி: சயின்டிஸ்ட் ‘பி’: 75 இடங்கள். சம்பளம்: ரூ.56,100- 1,77,500.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்

i) Electronics and Communication: 35 இடங்கள் (பொது-12, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ்/அப்ளைடு எலக்ட்ரானிக்ஸ்/ ரேடியோ இயற்பியல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பாடங்களில் எம்எஸ்சி., அல்லது எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், இன்ஸ்ட்ருமென்டேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பவர்/ டெலிகம்யூனிகேசன்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன்/ கம்யூனிகேசன் ஆப்டிக்ஸ்் மற்றும் ஆட்டோ எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரிக்கல் அல்லது நெட்வொர்க்கிங்/இன்பர்மேஷன் செக்யூரிட்டி இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,

ii) Computer Science: 30 இடங்கள் (பொது-10, எஸ்சி-6, எஸ்டி-4, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-2). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: கம்ப்யூட்டர்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம்/இன்பர்மேசன் இன்ஜினியரிங்/இன்பர்மேஜன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது இன்பர்மேஷன்/டேட்டா சயின்ஸ் பாடங்களுடன் ஏதேனும் ஒரு பி.இ., அல்லது பி.டெக்.,

iii) Geo- informatics and Remote Sensing: 5 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் ஆகிய பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் எம்எஸ்சி அல்லது ஜியோ இன்பர்மேட்டிக்ஸ்/ ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங்/ சிவில் இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/கம்யூனிகேசன் இன்ஜினியரிங் அல்லது ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் ஆகிய பாடங்களை பிரதான பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பாடத்தில் பி.இ., அல்லது பி.டெக்.,

iv) Mathematics: 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-1). தகுதி: 60% மதிப்பெண்களுடன் மேதமேட்டிக்ஸ்/ அப்ளைடு மேதமேட்டிக்ஸ்/ மேதமேட்டிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங்/மேதமேட்டிக்கல் சயின்சஸ் ஆகிய பாடங்களில் எம்எஸ்சி அல்லது 60% மதிப்பெண்களுடன் மேதமேட்டிக்ஸை பிரதானமாகக் கொண்டு ஏதேனும் ஒரு எம்எஸ்சி பட்டம் அல்லது மேதமேட்டிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்.,
விண்ணப்பதாரர்கள் 2022, 2023, 2024 ஆகிய கேட் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வயது: 8.11.24 அன்று 30க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.250/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://recruit-ndl.nielit.gov.in அல்லது https://ntro.gov.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.11.2024.

The post தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article