டெல்லி: நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது என்று தென்னை வளர்ச்சி வாரியம் அறிவித்துள்ளது. அண்மையில் இந்திய தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கடந்த 2016ம் ஆண்டு முதல் கேரளா மாநிலம் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்து வந்தது.
ஆனால், கடந்த 2022-2023ம் ஆண்டில் 563 கோடி தேங்காய்களை கேரளா உற்பத்தி செய்துள்ளது. இதே ஆண்டில் கர்நாடகா மாநிலம் 595 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்துள்ளது. இதன் அடிப்படையில் கேரளாவை விட சுமார் 30 கோடி தேங்காய்களை அதிகமாக உற்பத்தி செய்து கர்நாடகா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த 2023-24ம் ஆண்டு மதிப்பீடுகளின்படி 726 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து கர்நாடக மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் 578 கோடி தேங்காய்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு உள்ளது. மேலும், இந்த பட்டியலில் 564 கோடி தேங்காய் உற்பத்தி செய்து கேரளா 3-வது இடத்தில் பின்தங்கியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம்; 2வது இடத்தில் தமிழ்நாடு: தென்னை வளர்ச்சி வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.