தேசிய கீதம் ஒலிக்கும்போது கட்டுமான தொழிலாளி செய்த நெகிழ்ச்சி செயல்

2 months ago 14

புதுடெல்லி,

தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்பது ஒரு மரபாக உள்ளது. அப்படி பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது சுவரை வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தனது பணியை அப்படியே நிறுத்திவிட்டு மரியாதை செலுத்தியுள்ளார்.

அதே நேரத்தில், அந்தப் பள்ளியின் மாணவர்கள், வராண்டாவில் நடந்து செல்வதும், அரட்டை அடிப்பதும் என்று தங்கள் வேலையைத் தொடர்ந்தது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மாணவர்களுக்கு கல்வி தருவது மட்டும்போதாது, குடிமக்களின் கடமைகளையும் கற்பிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அவர் உண்மையான இந்தியர், இந்த மாமனிதருக்கு மரியாதை என்று சமூகதளவாசிகள் தொழிலாளியை புகழ்ந்து வருகின்றனர், மேலும் ஒரு தொழிலாளி கூட தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும்போது, கல்வி பெற்ற மாணவர்கள் அப்படிச் செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். தேசிய கீதம் ஒலிக்கும்போது நிற்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், அது ஒரு அடிப்படையான மரியாதை ஆகும்.

தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள திப்பார்த்தி நகரத்தில், தினமும் காலை 8:30 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கும்போது அனைவரும் நின்று மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது. 2022 ஜனவரி 27 முதல் இந்த நடைமுறை தொடங்கி இன்று வரை தொடர்கிறது என்று குறிப்பிடத்தக்கது.

Read Entire Article