புதுடெல்லியில் உள்ள தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழகத்தில் (National Institute of Education Planning and Administration) காலியாக உள்ள டிவிசன் கிளார்க் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: லோயர் டிவிசன் கிளார்க். 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1).
வயது: 18 லிருந்து 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https://www.niepa.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2025.
The post தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை பல்கலை.யில் டிவிசன் கிளார்க் appeared first on Dinakaran.