பணகுடி, டிச.4: தேசிய அளவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீச்சல் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் மாணவிகள் மரிய வின்சியா 1 தங்கம், 1 வெள்ளி பதக்கமும், சாஷினி 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கமும், மாணவர் சஞ்சய் ஜேஷ்வா 1 வெள்ளிப் பதக்கமும், மாணவி ஹனிஷ்கா 1 வெள்ளிப் பதக்கமும் மற்றும் தனிஷ் ஜேஷ்வா 1 வெண்கலப் பதக்கமும் என மொத்தமாக 1 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். அதற்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களான சுல்தான் சிக்கந்தர் பாஷா, சிக்கந்தர் சார்ஜன், அஜித்குமார் மற்றும் குணால் ஆகியோரையும், வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும், பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டிபிள்ளை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
The post தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.