சென்னை: யூடியூபரான இர்பான் தனது மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ ஊரக நல பணிகள் துறை தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவ ஊரக நல பணிகள் துறை இணை இயக்குனர் செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் டாக்டர் நிவேதிதா மருத்துவ பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்து 10 நாட்களுக்கு மருத்துவமனை இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி கூறியதாவது: இர்பான் வெளியிட்டுள்ள வீடியோ விவகாரம் தொடர்பாக பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளை தவிர மற்ற சிகிச்சையை 10 நாட்களுக்கு வழங்க கூடாது என உத்தவிட்டுள்ளோம். கர்ப்பிணி தாய்மார்கள் பலர் அந்த மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பார்கள். அவர்களின் நலன் கருதி இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இர்பான் மீது காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post தொப்புள் கொடியை இர்பான் வெட்டிய விவகாரம்; மருத்துவமனை 10 நாள் இயங்க தடை: தமிழ்நாடு அரசு அதிரடி appeared first on Dinakaran.