
சென்னை,
இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான படம் 'கருடன்'. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு பணிகள் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யார் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இதில் கதாநாயகிகளாக ஆனந்தி, அதிதி ஷங்கர் மற்றும் திவ்யா பிள்ளை ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 'கருடன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கினை 'நந்தி' படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தை கே.கே.ராதா கிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.