தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே வங்கி லாக்கரை உடைத்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை..!!

1 month ago 6

தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே வங்கி லாக்கரை உடைத்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ராயபர்த்தியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி கிளையில் 3 லாக்கர்கள் உள்ளே உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையர்கள் புகுத்த நிலையில் அவசர அலாரம் மற்றும் சிசிடிவி கேமரா இணைப்புகளை கழற்றி உள்ளனர்.

மேலும் உள்ளே சென்ற அவர்கள் கேஸ் கட்டர் மூலம் ஒரு லாக்கரை வெட்டி எடுத்து திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 500 வாடிக்கையாளர்களின் நகைகளும், 497 பேரின் நகைகளை திருடி சென்றுள்ளனர். கொள்ளையர்கள் செல்லும் பொழுது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த ஹார்ட் டிஸ்கையும் கையோடு எடுத்து சென்றனர். இது குறித்து நேற்று காலை விவரமறிந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 5 தனிப்படைகளை அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே வங்கி லாக்கரை உடைத்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை..!! appeared first on Dinakaran.

Read Entire Article