ஹைதராபாத்: கோஷாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக தலைமையிடம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பாஜக தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
“கட்சியில் இருந்து நீங்கள் ராஜினாமா செய்தது தொடர்பாக பாஜக தெலுங்கானா மாநிலத் தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு ஜூன் 30, 2025 அன்று எழுதப்பட்ட 1041 எண் கடிதத்திற்கான குறிப்பு இது.
மேற்கூறிய கடிதம் தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள உள்ளடக்கங்கள் பொருத்தமற்றவை மற்றும் கட்சியின் செயல்பாடு, சித்தாந்தம் மற்றும் கொள்கைகளுடன் பொருந்தவில்லை.
தேசியத் தலைவர் ஜகத் பிரகாஷ் நட்டாவின் வழிகாட்டுதலின்படி, உங்கள் ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக தலைமையிடம் அறிவிப்பு appeared first on Dinakaran.