தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு அமைச்சர் வாழ்த்து

3 months ago 18

ஒட்டன்சத்திரம், அக். 8: திண்டுக்கல் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர் ஜித்தின் அர்ஜுன். இவர் தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 7.61 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். வெற்றி பெற்று தங்கம் வென்ற மாணவர் ஜித்தின் அர்ஜுனை ஒட்டன்சத்திரம் முகாம் அலுவலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பயிற்சியாளர் துரைராஜ், மாவட்ட தடகள சங்க பொருளாளர் சவடமுத்து, கண்ணன், வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் பொன் கார்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post தெற்காசிய நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு அமைச்சர் வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article