தெருநாய் கடித்து 6 பேர் காயம்

3 months ago 19

வாடிப்பட்டி, அக். 8: வாடிப்பட்டியில் நேற்று வெறிநாய் ஒன்று கடித்ததில் இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். வாடிப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள சொசைட்டி தெருவில் அதிகப்படியான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென ஒரு நாய் அந்த பகுதியில் குடியிருந்து வருபவர்கள் தெருவில் நடந்து சென்றவர்கள் என பள்ளபட்டியைச் சேர்ந்த தனஸ்ரீ வயது (9), நீரேத்தான் கிராமத்தைச் சேர்ந்த கோபிகா ஸ்ரீ வயது (8), தாதம்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது (60), பொட்டுல்பட்டியை சேர்ந்த கோவிந்தம்மாள் வயது (49), தாதம்பட்டியைச் சேர்ந்த நளினி வயது (58), வடக்கம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டி வயது (19) உள்ளிட்ட 6 பேரை அடுத்தடுத்து கடித்தது.

காயமடைந்த அனைவரும் உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனை சென்றனர். அங்கு முதலுதவி கொடுத்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாய் விரட்டியதால் பயந்து ஓடிய இரண்டு பேரும் கீழே விழுந்து காயமடைந்து வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தெருநாய் கடித்து 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article