கேளம்பாக்கம்; சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் அகற்றம்

1 day ago 7

திருப்போரூர்: கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சோி வரை 6 வழிச் சாலை பணிகள் துவங்கின. முதல்கட்டமாக, சிறுசேரி ஐடி பூங்கா வரையில் 6 வழிப்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தொடர்ந்து, சிறுசேரி ஐடி பூங்கா முதல் பூஞ்சேரி வரையில் ஏற்கனவே 4 வழிச் சாலை உள்ளது. இதற்கிடையே படூர், கேளம்பாக்கம், திருப்போரூர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, படூரில் இருந்து தையூர் வரை ஒரு புறவழி சாலையும், காலவாக்கத்தில் இருந்து ஆலத்தூர் வரை மற்றொரு புறவழி சாலையும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சிறுசேரி ஐடி பூங்காவில் இருந்து படூர் புறவழி சாலை வரையிலான நான்கு வழி சாலையை 6 வழி சாலையாக மாற்ற தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்து, அதற்கான இழப்பீடு தொகையை வழங்கி, தனியாரிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தியது. நீண்ட இழுபறிக்கு பின் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, விரிவாக்க பணிகள் துவங்கப்படுகின்றன. இதற்காக சாலையோர பனைமரங்கள் நேற்று முழுமையாக அகற்றப்பட்டன. இதனால் பசுமையாக காட்சியளித்த பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கு விரைவில் சிறு கட்டிடங்களும் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் துவங்கி 3 மாதங்களில் நிறைவு பெறும் என்று சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கேளம்பாக்கம்; சாலை விரிவாக்க பணிக்கு மரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article