போரூர், ஏப்.27: அம்பத்தூர் அடுத்த புதூர் பானு நகர் 4வது பிரதான சாலை அடுக்குமாடி குடியிருப்பில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் ரேமா என்பவரும் வசித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன் இரவு பிரகாஷ் தன் அடுக்குமாடி குடியிருப்பு அருகே நின்று கொண்டிருந்த தெரு நாயை துரத்தி துரத்தி சென்று தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், பிரகாஷ் தாக்கிய தெருநாய் அடுத்த 2 நாட்களில் உயிரிழந்தது. தெரு நாயை தாக்கிய பிரகாஷ் மீது ரேமா அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரகாஷின் வளர்ப்பு பூனையை தெரு நாய் கடித்ததால் ஆத்திரம் அடைந்து நாயை அடித்து துரத்தியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post தெரு நாய் அடித்து கொலை: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.