
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் மாளவிகா மோகனன் கடைசியாக 'யுத்ரா' என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'ஹிருதயப்பூர்வம்' மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கேரள பொண்ணான மாளவிகா, தெய்யம் நடனம் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்று கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
'என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே தெய்யம், மிகவும் ஸ்பெஷல். அது நம்முடைய முன்னோர்களை பற்றியும் அவங்களின் வீரம், ஆன்மீகத்தை பற்றியும் அழகாக எடுத்து சொல்கிறது. தெய்யம் நடனம், நம்முடைய அடையாளம், வரலாறு, நம்பிக்கை. நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வரும் காலக்கட்டத்தில், இதுபோன்ற கலைதான், நம்முடைய வரலாற்றோடு இணைத்து வைத்திருக்கிறது' என்று பெருமையாக சொல்லி, வீடியோவையும் மாளவிகா பகிர்ந்துள்ளார்.
தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் நடைபெறும் ஒரு தனித்துவமிக்க ஆன்மீகம் பொங்கும் நடனக் கலையாகும்.