கோவை: போத்தனூர், மேட்டுப்பாளையம் செல்லும் மின்சார ரெயில் 16ம் தேதி ரத்து

3 hours ago 2

பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட ரெயில் சேவை வருகிற 16ம் தேதி ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அறிவித்துள்ளது

*மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூருக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 66611) வரும் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

*அதேபோல் போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு காலை 9.40 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 66612) வரும் 16ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும்.

பராமறிப்பு பணிகள் காரணமாக 16ம் தேதி மட்டும் மாற்றுப்பாதையில் செல்லும் ரெயில்கள்:

ஆலம்புழாவில் இருந்து தன்பாத்திற்கு காலை 6 மணிக்கு புறப்படும் ரெயில், (எண்13352) கோயம்புத்தூர் ஜங்ஷனை தவிர்த்து, போத்தனூர் இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர் ஜங்ஷனில் மாற்று நிறுத்தத்தைக் கொண்டிருக்கும். போத்தனூர் ஜங்ஷனில் 12.17/12.20 மணி நேரங்கள் நிறுத்தப்படும்.

எர்ணாகுளம் - கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 12678) காலை 9.10 மணிக்கு புறப்படும். , கோயம்புத்தூர் ஜங்ஷனை தவிர்த்து, போத்தனூர் இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூர் ஜங்ஷனில் மாற்று நிறுத்தத்தைக் கொண்டிருக்கும். போத்தனூர் ஜங்ஷனில் - 12.47/12.50 மணி நேரங்கள் நிறுத்தப்படும்.

Read Entire Article