இந்தியா - வங்காளதேசம் தொடர் நடைபெறுவதில் சிக்கல்..? - வெளியான தகவல்

7 hours ago 3

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, வங்காளதேச கிரிக்கெட் வாரியமோ இதுதொடர்பான அறிவிப்பை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.

Read Entire Article