
மதுரை,
தென்மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார். மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முதற்கட்டமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய சங்கர் ஜிவால், காவல்துறையினர் சிறார்கள், பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சைபர் கிரைம் குற்றங்கள், போதை வஸ்துகள் விற்பனையை தடுப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள்-காவல்துறை இடையே நட்புறவை பேணிக்காக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.