நீடாமங்கலம் ; வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்டு வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சிபெற்றனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் வேளாண் கல்லூரி மாணவிகள் மிருதுளா, மித்ரா, மோனிஷா, நஜீபா, நந்து, நிவேதியா, பத்மாவதி, பார்கவி பவித்ரா, பவித்ரா தேவி, வெ.பிரபாஸ்ரீ,மு.பிரபா ஸ்ரீ, பிரசித்தபிரியா ஆகியோர் நீடாமங்கலம் அருகில் உள்ள வேப்பங்குளத்தில் அமைந்துள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தை நேரில் பார்வையிட்டனர். அங்கு திட்ட ஒருங்கிணைப்பாளர் குமணன், மாணவிகளுக்கு தென்னை ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
வேப்பங்குளத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையம் 1958ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1973ம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அதிக தேங்காய் மகசூல், கொப்பரை மற்றும் எண்ணெய் உள்ளடக்கத்திற்காக புதிய அதிக மகசூல் தரும் தேங்காய்கள் கலப்பினங்களை உருவாக்கி ஊக்குவித்தல், இளநீர் கொட்டை நோக்கத்திற்காக பொருத்தமான தென்னை மரபணு வகைகள் மற்றும் கலப்பினங்களை அடையாளம் கண்டு மதிப்பீடு செய்தல்.
கொட்டை மற்றும் எண்ணெய் விளைச்சலை அதிகரிப்பதற்கான மேம்பட்ட நடைமுறைகளின் தொகுப்பை உருவாக்குதல்.பூச்சி மற்றும் நோய் பாதிப்புகளைத் தவிர்க்க தொழில்நுட்பங்களை உருவாக்குதல், உயர்தர உயரமான, குட்டையான மற்றும் கலப்பின தென்னை நாற்றுகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்தல், தென்னை விவசாயிகள் எதிர்கொள்ளும் வயல் பிரச்சினைகளுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குதல் போன்ற பணிகள் தென்னை ஆராய்ச்சி நிலையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு வெள்ளை சுருள் ஈ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
The post தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.