
சியோல்,
தென்கொரியாவின் முன்னாள் அதிபர் மூன் ஜே இன். கடந்த 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த அவர் சட்ட விரோதமாக தனது முன்னாள் மருமகனை விமான போக்குவரத்து துறை இயக்குனராக பதவியமர்த்தி உள்ளார். எனவே அவர் பெற்ற ஊதியம், சலுகைகள் மூலம் தாய்லாந்தின் தாய் ஈஸ்டர் ஜெட் விமான நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபரின் பட்டியலில் மூன் ஜே இன்னும் இணைந்துள்ளார். முன்னதாக முதல் பெண் அதிபரான பார்க் கியூன்-ஹை, தாராளவாத கட்சியைச் சேர்ந்த ரோ மூ-ஹியூன் உள்ளிட்ட பல அதிபர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.