நடத்தையில் சந்தேகம்: மனைவியை கல்லால் தாக்கி கொன்றவர் கைது

5 hours ago 3

மும்பை,

மராட்டிய மாநிலம்பால்கர் மாவட்டம் நாக்யா கட்காரிபாடா பகுதியை சேர்ந்த 50 வயது பெண், குப்பை பொறுக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது கணவர் சமீபகாலமாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி அப்பெண் இரவு வரையில் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நரேஷ் பாட்டில் வாடி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் மனைவி இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற அவர், தூங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கூறினார். இதற்கு அப்பெண் மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவத்தில் மண்டை உடைந்து அப்பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், நடத்தை சந்தேகம் காரணமாக மனைவியை கணவர் கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Read Entire Article