தென்காசி : தென்காசி நகராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பினை திமுக நகரச்செயலாளரும், நகர் மன்ற தலைவருமான சாதிர் துவக்கி வைத்தார். நிகழ்வில் நகர நிர்வாகிகள் கிட்டு, பால்ராஜ், ராம்துரை, பொருளாளர் ஷேக்பரீத், மாவட்ட பிரதிநிதி மைதீன்பிச்சை, கவுன்சிலர்கள் ஆசிக்முபினாசன்ராஜா, சுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் ராமநாதன், சண்முகநாதன், பழக்கடைகுமார், பூ ஆறுமுகம், தொண்டரணி கோபால்ராம், சட்டமன்ற ஐடி அணி முகமது ரஃபி, அறங்காவலர் இசக்கிரவி, சந்திரன், பட்டாணி, ரெசவுமைதீன், கருத்தப்பாண்டி, முகமது, சபரிசங்கர், சங்கர் ராஜன், காஜா, இளைஞர் அணி அப்துல் கரீம், முகமது பாசில், மதிமுக ரத்தினம், காங்கிரஸ் செண்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி நகராட்சி கீழப்புலியூர் பகுதியில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் பாலாமணி தலைமையில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.
மாவட்ட பிரதிநிதி பாலசுப்பிரமணியன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் இசக்கித்துரை, வட்ட செயலாளர்கள் அருணாசலம், வேம்பு, அறங்காவலர் குழு தலைவர் முருகானந்தம், சிதம்பரம், லக்குமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடையம்: கடையம் அருகே பொட்டல்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் 2 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமை வகித்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க எழுத்தர் அன்னாள் பிளாரன்ஸ், முன்னாள் கூட்டுறவு சங்க உறுப்பினர் முத்துலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் முகைதீன் பாத்திமா, ஹமிதா பானு,விற்பனையாளர்கள் பீட்டர், வெங்கட்ராமன், ஊராட்சி செயலாளர் ஜெயசிங் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் : கடையநல்லூரில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலை திமுக முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை வழங்கினார்.
நகரச் செயலாளர் அப்பாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முருகன், திரிகூடபுரம் பஞ். துணைத்தலைவர் செய்யது மீரான், நயினாரகரம் பெருமாள் கோயில் அறங்காவலர் குமார், நகர துணைச்செயலாளர்கள் காசி, மஸ்தான் அலி, வார்டு செயலாளர் மாரி, லெட்சுமணன், பண்டாரம், செய்யது மசூது, பீரப்பா, யாசின், மயில்சாமி, அலி, அயூப்கான், சேகனா, அப்துல் மஜீத், அப்துல், காதர், நல்லையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் செல்வவிநாயகர்புரம் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் கலந்து கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, ஓய்வு டால்டன், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் தாலுகா கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பினை கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, கிளை செயலாளர் முருகன், ஊராட்சி உறுப்பினர்கள் பாப்பா லிங்கம், பவுன்ராஜ், வைகுண்டராஜா, பொன்னு ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை: வடகரை பேரூராட்சியில் ரேஷன் கடைகளில் பேரூராட்சி தலைவர் ஷேக் தாவுது பொங்கல் பரிசு தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் முகமது உசேன், அவைத் தலைவர் முகைதீன் பிச்சை, துணை செயலாளர்கள் நூர் முகம்மது, பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் சாகுல்கமீது, ராஜேந்திரன், மாவட்ட அணி நிர்வாகிகள் கனல் காஜா, சாகுல் கமீது, ஒன்றிய பிரதிநிதிகள் முகமது வகுதார், இஸ்மாயில், கவுன்சிலர்கள் சேக் உசேன் பீவி, ஆயிஷா பேகம், அரபு நிஷா, சமீமா, வார்டு நிர்வாகிகள் பேச்சிமுத்து, முகமது கனி, அருணா, முகமது அனிபா, நயினார், ராமர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தென்காசி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.