தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் செய்த இளைஞர்கள்: நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவில் 2 பேர் கைது

2 months ago 10

தென்காசி: தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் செய்து வீடியோ வெளியிட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தோடு இளைஞர்கள் அதிகமாக ரீல்ஸ் பதிவு செய்து வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் விபரீதமான விளைவுகள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் ரீல்ஸ் விடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் போலியாக கட்டு போட்டு கொண்டு வரும் நோயாளிகளிடம் பிராங்க் செய்த விடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் நோயாளிகள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு இடையூராக செயல்பட்டதாகவும், மேலும் வீடியோ எடுக்கும் போது கேள்வி எழுப்பிய மருத்துவமனை அதிகாரியிடம் அவதூறாக பேசியதாகவும் தெரிய வந்தது. இதுகுறித்து 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செங்கோட்டை பகுதியை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது இடங்களிலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தென்காசி அரசு மருத்துவமனையில் பிராங்க் செய்த இளைஞர்கள்: நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய பிரிவில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article