செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய டி20 அணி, இன்று நடக்கும் 3வது போட்டியில் வென்று தொடரில் முன்னிலை வகிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்தியா டி20 அணி, அந்நாட்டு அணியுடன், 4 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 61 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆனால் கெபேராவில் நடந்த 2வது ஆட்டத்தில் வெற்றியை நெருங்கிய இந்தியா, 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 3வது ஆட்டம் இன்று செஞ்சுரியனில் நடைபெற இருக்கிறது. இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை தோல்வியின்றி முழுமையாக கைப்பற்றிய இந்திய அணி முதல் தோல்வியை தற்போது சந்தித்துள்ளது. எனவே சூரியகுமார் தலைமையிலான இந்திய அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப இன்று முனைப்புக் காட்டும்.
தொடர்ந்து அதிரடியாக பந்து வீசி வரும் சுழல் வீரர் வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னாய், ஆவேஷ்கான் ஆகியோருடன் பேட்ஸ்மேன்களும் கை கொடுத்தால் அதிரடி நிகழ்த்த முடியும். ஆனால் 2வது ஆட்டத்தில் பந்து வீச்சாளர்கள் ஆடியும், பேட்ஸ்மேன்கள் கோட்டை விட்டனர். அதேபோல் அய்டன் மார்க்ரம் தலைமையிலான தெ.ஆ அணியும் மீண்டும் வெற்றிக்கு முனைப்புக் காட்டும். அந்த அணியிலும் கிளாஸன், யென்சன், கோட்ஸீ, மில்லர் என திறமைக்கு பஞ்சமில்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
செஞ்சுரியனில் இன்று மோதல்
அணி விவரம்
இந்தியா: சூரியகுமார்(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்கள்), திலக் வர்மா, ரிங்கு சிங், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ரமன்தீப், அக்சர், ரவி பிஷ்னாய், விசாக், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப், யாஷ் தயாள், ஆவேஷ் கான்.
தென் ஆப்ரிக்கா: அய்டன் மார்க்ரம்(கேப்டன்), ஃபெர்ரெய்ரா, கிளாஸன், ரியான், டிரிஸ்டன்(விக்கெட் கீப்பர்கள்), ஒட்நீல், ஜெரால்டு கோட்ஸீ, கேசவ் மகாராஜ், மிஹ்லலி, பீட்டர், அண்டில் சிமேலன்.
The post தென் ஆப்ரிக்காவுடன் 3வது டி20: தட்டித் தூக்குமா இந்தியா? appeared first on Dinakaran.