அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

6 hours ago 2

திருப்பத்தூர்: அண்​ணா, கருணாநிதி போன்ற தலை​வர்​களை கொச்​சைப்​படுத்தி வீடியோ போடு​கிறார்​கள், அதை அதி​முக​வினர் வேடிக்​கைப் பார்க்​கிறார்​கள். அண்ணா பெயரை அதி​முக அடமானம் வைத்​து​விட்​டது என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார்.

திருப்​பத்​தூர் மாவட்​டம் ஜோலார்​பேட்டை அடுத்த மண்​டல​வாடி பகு​தி​யில் நேற்று நடைபெற்ற அரசு விழா​வில் முடிவுற்ற பணி​களை திறந்​து​வைத்​தும், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​யும், பயனாளி​களுக்கு அரசு நலத்​திட்ட உதவி​களை வங்​கி​யும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: மக்​கள் நலனில் அக்​கறை இல்​லாத கடந்த ஆட்​சி​யாளர்​களால் சீரழிந்த தமிழகத்​தின் வளர்ச்​சியை திரா​விட மாடல் அரசு கடந்த 4 ஆண்​டு​களில் மீட்​டெடுத்​துள்​ளது. தமிழகத்​துக்கு ஓரவஞ்​சனை செய்​யும் மத்​திய அரசால்​கூட நமது வளர்ச்​சியை மறைக்க முடிய​வில்​லை.

Read Entire Article