தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம்... விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து

3 hours ago 1

லாகூர்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் கராச்சியில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களம் புகுந்தனர். இதில் சால்ட் 8 ரன்னிலும், டக்கெட் 24 ரன்னிலும், அடுத்து வந்த ஜேமி ஸ்மித் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்க்க முயற்சித்தனர். ஆனால் இந்த இணையும் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரூட் 37 ரன்னிலும், ஹாரி புரூக் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிவிங்ஸ்டனும் 9 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 21 ஒவரில் 114 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

தற்போது கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஜேமி ஓவர்டன் களம் இறங்கி உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் தற்போது வரை மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும், கேசவ் மகராஜ் 2 விக்கெட்டும், வியான் முல்டர் 1 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். 

Read Entire Article