தெக்கேப்புரம் பகவதி கோயில் விழாவில் யானை மிரண்டதால் பக்தர்கள் ஓட்டம்: குன்னம்குளம் அருகே பரபரப்பு

5 hours ago 1

பாலக்காடு: குன்னம்குளம் அருகே தெக்கேப்புரம் பகவதி கோயில் திருவிழாவில் யானை மிரண்டதால் பக்தர்கள் ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர். திருச்சூர் மாவட்டம், குன்னம்குளம் அருகே தெக்கேப்புரம் மாகாலிக்காவு பகவதி கோவில் கும்ப பரணி திருவிழாவிற்கு சிவன் என்கிற வளர்ப்பு யானை நேற்று வரவழைக்கப்பட்டது. சுவாமி வீதியுலா சமயத்தில் இந்த யானை மீது உற்சவ மூர்த்தி ஏற்றப்பட்டது. திருவிழா நிறைவின்போது உற்சவ மூர்த்தியை யானை மீதிருந்து இறக்கியபோது யானை மிரண்டு சேட்டை செய்தது. மேலும், சிறிது தூரத்திற்கு மிரண்டோடியது. இதனால், திருவிழாவிற்கு வந்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவிழா கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலறியடித்து ஓடியவர்களில் சிலர் கீழே விழுந்து காயமடைந்தனர். உடனடியாக யானை பாகன்கள் சங்கிலியால், யானையின் கால்களை பிணைத்து கட்டுப்படுத்தி யானையை லாரி மீது ஏற்றினர். விரைந்து வந்த எலிபென்ட் ஸ்குவார்டு உதவியாளர்களுடன் யானை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின், திருவிழா மைதானத்தில் அமைதி நிலவியது. இச்சம்பவத்தால் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post தெக்கேப்புரம் பகவதி கோயில் விழாவில் யானை மிரண்டதால் பக்தர்கள் ஓட்டம்: குன்னம்குளம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article