தெ.ஆப்ரிக்கா வீரர்களிடம் அத்துமீறல்: 3 பாக். வீரர்களுக்கு ஐசிசி அபராதம்

3 months ago 6

கராச்சி: பாகிஸ்தான் சென்றுள்ள தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் கராச்சியில் நடந்த லீக் போட்டியில் முதலில் பேட் செய்த 50 ஓவரில் 352 ரன் எடுத்தது. இமலாய இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன் எடுத்து சாதனை வெற்றியை பதிவு செய்தது. பாகிஸ்தான் கேப்டன் 122, சல்மான் ஆகா 134 ரன் எடுத்தனர். இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் செய்தபோது, பாகிஸ்தான் வீரர்கள் ஷஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதாகவும், முறையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் 3 பேருக்கு ஐசிசி அபராதம் விதித்து உள்ளது. அதன்படி போட்டி சம்பளத்தில் இருந்து ஷஹீன் அப்ரிடிக்கு 25 சதவீதமும், சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகிய 2 பேருக்கு 10 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The post தெ.ஆப்ரிக்கா வீரர்களிடம் அத்துமீறல்: 3 பாக். வீரர்களுக்கு ஐசிசி அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article