தூய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோராக்க புதிய திட்டம்: அமைச்சர் தகவல்

3 weeks ago 5

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திரு.வி.க.நகர் தொகுதி எம்எல்ஏ தாயகம் கவி(திமுக) கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்காக ஒரு புதிய திட்டத்தை, தலித் இந்தியன் சேம்பர் ஆர் காமர்ஸ் அன்ட் இன்டஸ்டிரி (டிஐசிசிஐ) என்ற நிறுவனத்தோடு, இணைந்து செயல்படுத்துகிறோம். பணியின்போது உயிரிழந்த பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் என 39 பேர், 48 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 126 வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை கொடுத்து மொத்தம் 213 பேருக்கு நவீன கழிவுநீர் அகற்று இயந்திரங்கள் வழங்கி, இவர்களை தொழில்முனைவோர்களாக மேம்படுத்த முதல்வர் மூலம் நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

 

The post தூய்மைப்பணியாளர்களை தொழில் முனைவோராக்க புதிய திட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article