தூய்மை பணியாளர்களும் நம்மில் ஒருவர்தான்! - ‘மக்கும், மக்காத’ குப்பைகளை பிரித்து வழங்க தயங்குவது ஏன்?

2 weeks ago 1

சென்னை மாநகரம் 426 சதுர கிமீ பரப்பு கொண்டது. இதில் சுமார் 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து தினமும் 5,900 டன் குப்பை உற்பத்தியாகிறது. இவை சரிபாதியாக கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கும் குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு வருகிறது.

குப்​பைகளை வீடு வீடாக சேகரித்து, குப்பை தொட்​டிகளில் கொட்டு​வது, அவற்றை லாரிகள் மூலம் ஏற்றி சென்று, குப்பை கொட்டும் வளாகங்​களில் கொட்டுவது ஆகிய பணிகளில் 4,727 நிரந்தர பணியாளர்கள் உள்ளிட்ட 18,845 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்க காலத்​தில், வீடு​களில் சேகரிக்​கப்​பட்ட குப்​பைகள் அனைத்​தும் அப்படியே குப்பை கொட்டும் வளாகங்​களில் கொட்​டப்​பட்டன. இதனால் கொடுங்​கையூர் குப்பை கொட்டும் வளாகத்​தில் 269 ஏக்கர் பரப்​பள​விலும், பெருங்​குடி​யில் 200 ஏக்கர் பரப்​பள​விலும் குப்​பைகள் மலைபோல் குவிந்​துள்ளன.

Read Entire Article