தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

4 months ago 15

 

உடுமலை, டிச.9: உடுமலை நகராட்சி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, இந்திய மருத்துவ சங்கம் உடுமலை கிளை இணைந்து நடத்திய தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் தலைமை தாங்கினார். நகரமன்ற தலைவர் மத்தீன் முன்னிலை வகித்தார். நகராட்சி திருப்பூர் மண்டல பொறியாளர் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு காசநோய் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டது.நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை,உயர் ரத்த அழுத்த பரிசோதனை,கண் பரிசோதனை,காசநோய் பரிசோதனை செய்து கொண்டனர்.இதில் நகராட்சி பொறியாளர்,துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article