தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு

6 months ago 22

தூத்துக்குடி,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் சீர் செய்யப்படும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உறுதியளித்துள்ளார். இன்று தூத்துக்குடி சூசைபாண்டியாபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நீரை வெளியேற்ற துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் கலெக்டர் அலுவலகம், இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், ரேசன் பொருட்களை பாதுகாத்து வைக்கக்கூடிய பகுதியை சுற்றி தேங்கி நின்ற மழை நீரில் இறங்கி நடந்து சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் உணவு கழகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். 

Read Entire Article