
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால், தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் பின்வரும் வாட்ஸ்அப் எண்கள் மற்றும் கட்டுப்பாட்டு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குடிநீர் தொடர்பான புகார்களை மட்டும் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். புகார் தெரிவிக்கும்போது புகார்தாரரின் பெயர் மற்றும் முகவரியுடன் புகார்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட அளவில் புகார்கள் தெரிவிக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு உதவி மையம் உருவாக்கப்பட்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை மாவட்ட அளவிலான உதவி மைய எண்ணான 7402908492 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தெரிவிக்கலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் வட்டார அளவில் பின்வரும் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக உதவி மைய வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முறையே தூத்துக்குடி- 7402608553, கருங்குளம்- 7402608555, திருவைகுண்டம்- 7402608557, ஆழ்வார்திருநகரி- 7402608559, திருச்செந்தூர்- 7402608561, உடன்குடி- 7402608563, சாத்தான்குளம்- 7402608565, கோவில்பட்டி- 7405608567, கயத்தார்- 7402608569, ஓட்டப்பிடாரம்- 7402608571, விளாத்திகுளம்- 7402608573, புதூர்- 7402608575 ஆகிய வாட்ஸ்அப் எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.