தூத்துக்குடி, ஜன. 21: தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்று குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் மின் விநியோகம் செய்யப்படும் மின்சார பாதையான கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகர பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
The post தூத்துக்குடியில் இன்று குடிநீர் விநியோகம் ‘கட்’ appeared first on Dinakaran.