
தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி பீச் ரோடு மீன்பிடி துறைமுகம் அருகில் பைக்குடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவரது பைக்கில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை செய்தனர். அதில், அவர் தூத்துக்குடி ராமர்விளை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் பிரபு வினோத்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. மேலும் பிரபு வினோத்குமாரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1 கிலோ 750 கிராம் கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.