தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது

5 hours ago 4

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 17 நாட்களுக்குப் பிறகு இன்று முழு உற்பத்தித் திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, 29 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு , தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர்.

16ம் தேதி, முதல் யூனிட்டில் மின் உற்பத்தியைத் தொடங்க நேற்று 2வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது, முதல் அனல் மின் நிலையத்தின் முழு உற்பத்தித் திறன் நேற்று மாலை எட்டப்பட்டது.

Read Entire Article