தூத்துக்குடி 4 வழி சாலையில் இணையும் பர்கிட்மாநகர் இணைப்பு சாலை பராமரிப்பின்றி பாழானதால் அவதி

1 week ago 1

கேடிசி நகர் : பாளையங்கோட்டை அடுத்த பர்கிட்மாநகர் மற்றும் நடுவகுறிச்சி, சீவலப்பேரி, வாகைகைக்குளம் ஆகிய கிராமங்களில் இருந்து தூத்துக்குடி நான்குவழிச் சாலைக்கு செல்வதற்கு இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை பர்கிட்மாநகர் பகுதியில் ஆரம்பித்து சாரதா கல்லூரியை கடந்து தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் இணைகிறது.

சுமார் 5 கி.மீ. தொலைவு வரை செல்லும் இந்த சாலையில் தினமும் பல கிராம மக்கள் மட்டுமின்றி, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய ஊர்களுக்கு பணி நிமித்தமாக செல்லும் அரசு ஊழியர் முதல் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ள பல கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் செல்கின்றனர்.

எனவே இது ஒரு முக்கியமான இணைப்பு சாலை ஆகும். அதுமட்டும் இன்றி பர்கிட்மாநகர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேலகுளம், அரியகுளம், உத்தமபாண்டிகுளம் தளவாய்புரம் போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சாலையை கடந்து தான் சிகிச்சைக்கு வர வேண்டியது உள்ளது.

இப்படி ஒரு முக்கியம் வாய்ந்த இந்த இணைப்பு சாலை பர்கிட்மாநகரில் ஆரம்பித்து மேலகுளம் பகுதி வழியில் தூத்துக்குடி நான்குவழிச் சாலை வரை குண்டும் குழியுமாகத் தான் உள்ளது. இதனால் டூ வீலரில் பயணம் செய்பவர்களும், பஸ்சில் செல்லும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

The post தூத்துக்குடி 4 வழி சாலையில் இணையும் பர்கிட்மாநகர் இணைப்பு சாலை பராமரிப்பின்றி பாழானதால் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article