சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு வசதியாக, தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்.06168) தூத்துக்குடியில் இருந்து 19-ம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் - மதுரை இடையே வரும் 18-ம் தேதி முன்பதிவில்லா மெமு ரயில் (வண்டி எண்.06061) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06062) மதுரையில் இருந்து 19-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.