டெல்லி: விண்வெளியில் 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன என இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4-வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது. 1.5 கி.மீ. இடைவெளியில் இருந்த செயற்கைக்கோள்கள் 50 மீட்டராகவும், பிறகு 15 மீட்டராகவும், இறுதியில் 3 மீட்டராகவும் குறைத்து இணைக்கப்பட்டுள்ளது.
The post பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டன: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.