தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 300 கிராம்
கத்தரிக்காய் – 250 கிராம்
மட்டன் எலும்பு – 1 கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 50 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மல்லித் தூள் – 3 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வேக வைக்கவும். பருப்பு வெந்ததும் மட்டன் எலும்பைச் சேர்க்கவும்.
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். புளி, மசாலாப் பொருட்கள், இஞ்சி – பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து கலக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். பருப்பு, கத்தரிக்காய் மற்றும் மட்டன் எலும்பு வெந்ததும், உப்பு சேர்த்து கலக்கவும். சுவைக்காக புளி, மிளகாய், மல்லித்தூள் ஆகியவற்றை சரிபார்த்து சேர்க்கவும். தேவைப்பட்டால், சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.
The post துவரம் பருப்பு, கத்தரிக்காய் தால்சா appeared first on Dinakaran.