துவரங்குறிச்சி, ஏப். 26: துவரங்குறிச்சி பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்ததால் விலை குறைந்தது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பகுதிகளில் அதிக அளவில் தக்காளி பயிரிடப்பட்டு தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளது
இதனால் தக்காளியின் விலை சில்லரை விற்பனையில் கிலோவிற்கு 15 ரூபாய் விற்கப்பட்டு வருகிறது. மொத்த விற்பனை கடையில் சில்லறை விற்பனையாளர்கள் ஏலம் எடுப்பதற்காக கூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த தக்காளி பழங்கள். தக்காளியின் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post துவரங்குறிச்சி பகுதிகளில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு appeared first on Dinakaran.