வேதாரண்யம், பிப். 15: வேதாரண்யம் வட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ‘துளிர் அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வு 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. இது நீட் முதலான போட்டி தேர்வுகளுக்கு அடிப்படைத் தேர்வு மட்டுமின்றி நீட் முதலான தேர்வுகளின் பயத்தை போக்கி தேர்வுகள் எழுதும் விருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மாணவர்களை படிப்பிலும், கற்றலிலும் அதிக கவனம் கொள்ள வழிவகுக்கும் என்றும் வேதாரண்யம் வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் சித்திரவேலு தெரிவித்தார் .மேலும் வேதாரண்யம் வட்டாரத்திலுள்ள அண்டகத்துறை, அண்டர்காடு, ஆதனூர், ஆறுகாட்டுத்துறை உட்பட 32 மையங்களில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பள்ளிகளில் படிக்கும் 742 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர்.
The post துளிர் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வு appeared first on Dinakaran.