துளித் துளியாய்…

1 week ago 3

* சேப்பாக்கம் பிட்ச்தான் பெஸ்ட்
இந்தியா, வங்கதேசம், நியுசிலாந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்ற டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்தது. இதற்கான போட்டிகள், சென்னை, புனே, மும்பை, கான்பூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடந்தன. போட்டிகள் நடந்த பிட்ச்களின் தரம் பற்றிய மதிப்பீட்டை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமே பெஸ்ட் என கூறப்பட்டுள்ளது.

* முகம்மது நபி ஓய்வு
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான முகம்மது நபி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். வரும் 2025 பிப்ரவரியில் நடக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கென அவர் பங்கேற்கும் போட்டிகளே கடைசியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 1000வது ஆட்டம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 11வது தொடர் நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று மாலை, சென்னை எப்சி – மும்பை சிட்டி எப்சி அணிகள் இடையே நடப்பது, ஐஎஸ்எல்லின் 1000வது போட்டி என்ற சாதனை நிகழ்வாக அரங்கேற உள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் இரு அணிகளின் வீரர்களும் நேற்று ஈடுபட்டனர்.

* இஸ்ரேல் ரசிகர்கள் மீது தாக்குதல்
நெதர்லாந்தில் நடைபெறும் யுரோபா லீக் கால்பந்து போட்டிகளை காண சென்றுள்ள இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ரசிகர்கள் மீது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இரண்டு விமானங்களில் அழைத்து வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளார். ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ரஞ்சி போட்டியில் அசாம் முன்னிலை
தமிழ்நாடு – அசாம் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3ம் நாளான நேற்று, முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடிய அசாம் அணி, 445 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. பின் இரண்டாம் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. முன்னதாக, முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அணி 338 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

The post துளித் துளியாய்… appeared first on Dinakaran.

Read Entire Article