துளிகள்…

2 months ago 8

* லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியை தொடர்ந்து கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது.
* புரோகபடி போட்டியின் 11வது தொடர் லீக் ஆட்டங்கள் ஐதராபாத், நொய்டா நகரங்களில் முடிந்ததையடுத்து, இன்று, மகாராஷ்டிராவின் புனே நகரில் பெங்களூரு புல்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையேயும், யு மும்பா – புனேரி பல்தான் அணிகள் இடையேயும் 89 மற்றும் 90வது லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.
* ஆசிய கோப்பை ஆண்கள் ஜூனியர் ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கிறது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், சீன தைபே, தாய்லாந்து, பாகிஸ்தான், மலேசியா, வங்கதேசம், ஓமன், சீனா என மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி தான் விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன. அதற்கு முன்னதாக நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் பாகிஸ்தானும், ஜப்பானும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும்.
* ஏடிபி, டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டிகளுக்கு பிறகு இந்த ஆண்டு முக்கிய டென்னிஸ் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. வழக்கமாக ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டி இம்மாதம் 29ம் தேதியே தொடங்குகிறது. ஜனவரி இறுதியில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் ஜன.12ம் தேதி ஆரம்பிக்கிறது.

The post துளிகள்… appeared first on Dinakaran.

Read Entire Article