துல்கர் சல்மான் படத்தில் எஸ். ஜே. சூர்யா!

3 months ago 24

மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். அவர் தற்பொழுது லக்கி பாஸ்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 31ம் தேதி வெளியாகவுள்ளது. துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படம் 'சீதா ராமம்'.

எஸ்.ஜே. சூர்யா தற்போது மலையாள மொழி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். ஏற்கனவே பஹத் பாசில் உடன் இணைந்து ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்தார். இதன் மூலம் அவர் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் எஸ். ஜே. சூர்யா. அதன்படி, ஆர்.டி.எக்ஸ் படத்தின் இயக்குனர் நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. மேலும், இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

டைரக்டராகவும் கதாநாயகனாகவும் முத்திரை பதித்த எஸ்.ஜே.சூர்யா தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். 'மார்க் ஆண்டனி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் மற்றும் நானியின் 31-வது திரைப்படமான 'சூர்யாவின் சனிக்கிழமை' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

Read Entire Article