
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து "தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்" உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான "சீதா ராமம்", 'லக்கி பாஸ்கர்' படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. இவர் தற்போது செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ஐ அம் கேம்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படம் சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.