சென்னை: தடாவில் சென்னை துறைமுகத்துக்கு வந்த கண்டெய்னர் லாரியில் இருந்த ஏசி பெட்டிகள் திருடப்பட்டுள்ளது. திட்டம் போட்டு 90 ஏசி பெட்டிகளை திருடிய 6 பேர் கொண்ட ஓட்டுனர் கும்பலை போலீஸ் கைது செய்தது. சென்னை துறைமுகம் மூலம் கொல்கத்தா சென்ற பின்பு பெட்டிகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.18.75 லட்சம் ரொக்கம், 15 ஏசி பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post துறைமுகம் வந்த கண்டெய்னரில் ஏசி பெட்டி திருட்டு..!! appeared first on Dinakaran.