துறைமுக கழகத்தில் மேனேஜர் மற்றும் அதிகாரிகள்

4 hours ago 1

1. அக்கவுன்ட்ஸ் ஆபீசர், கிரேடு-1: 6 இடங்கள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்டில் தேர்ச்சியும் நிதி/அக்கவுன்டிங்/இன்டஸ்ட்ரியல்/ கமர்ஷியல் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. உதவி மேலாளர்:
i) நிதி பிரிவு: 2 இடங்கள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்டில் தேர்ச்சியும் நிதி/அக்கவுன்டிங்/இன்டஸ்டிரியல்/கமர்ஷியல் துறையில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ii) அடிப்படை கட்டமைப்பு மற்றும் சிவிக் பிரிவு: 5 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iii) நிர்வாக பிரிவு: 1 இடம். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
iv) பணியாளர்கள் மற்றும் தொழில் நிறுவன தொடர்பு பிரிவு: 1 இடம். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v) போக்குவரத்து இயக்கம் (ரயில்வே) பிரிவு: 1 இடம். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
vi) போக்குவரத்து இயக்கம் (ஷிப்பிங் மற்றும் கார்கோ கையாளுதல்): 1 இடம். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுவம் பெற்றிருக்க வேண்டும்.

3. உதவி நிர்வாக பொறியாளர் (சிவில்): 9 இடங்கள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. அசிஸ்டென்ட் பெர்சனல் ஆபீசர், கிரேடு-1: 2 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. அசிஸ்டென்ட் செக்ரட்டரி, கிரேடு-1: 2 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6. அசிஸ்டென்ட் டிராபிக் ஆபீசர்: 7 இடங்கள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
7. அசிஸ்டென்ட் எஸ்டேட் மேனேஜர்: 4 இடங்கள். தகுதி: ஆர்க்கிடெக்சர்/டவுன் மற்றும் நகரமைப்பு திட்டம் பிரிவில் முதுநிலை பட்டம் தேர்ச்சி அல்லது சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது 30க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.50,000- 1,60,000.
விண்ணப்பதாரர்கள் சிபிடி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400/-. ஒபிசி மற்றும் பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டி மற்றும் பெண்களுக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.https://www.ipa.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2025.

The post துறைமுக கழகத்தில் மேனேஜர் மற்றும் அதிகாரிகள் appeared first on Dinakaran.

Read Entire Article