
சென்னை,
18-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதனையொட்டி இரு அணி வீரர்களும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக உள்ள பிராவோ சென்னை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் இடத்திற்கு வந்தார். இதனை கண்ட தோனி, "துரோகி வரார் பாருங்கள்" என்று கலாய்த்தார்.
இதனையடுத்து ஜடேஜாவை சந்தித்து பேசிய பிராவோ, தோனியுடன் ஜாலியாக பேசினார். இந்த வீடியோவை சென்னை நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
நீண்ட காலமாக சென்னை அணியில் வீரராகவும் பயிற்சியாளராகவும் (2 சீசன்கள்) இருந்த பிராவோ கொல்கத்தாவுக்கு சென்றதை குறிப்பிட்டு கிண்டல் செய்யும் விதமாக தோனி, பிராவோவை துரோகி என்று அழைத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.