சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழக அரசும் ஆளுநரும் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று முன்னாள் துணைவேந்தரும், கல்வியாளருமான பேராசிரியர் இ.பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் உறுப்பினரும், கல்வியாளருமான இ.பாலகுருசாமி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களைத் தேடும் குழுக்களில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பிரதிநிதியைச் சேர்ப்பது தொடர்பான விஷயத்தில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையில் நீண்டகாலமாக மோதல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதன் விளைவாக பல பல்கலைக்கழகங்களில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்கள் இல்லை. அத்துடன் அடுத்த ஓரிரு மாதங்களில் அனேகமாக எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்கள இல்லாத நிலை ஏற்படும்.